ஒரு மிகப்பெரிய காத்திருப்பின் கடைசி கணம்
இந்த வானத்தில்தான் முடிந்தது
ஒரு மிகப்பெரிய கருணையின் கடைசித்துளி சாயம்
இந்த வானத்தில்தான் வடிந்தது
ஒரு மிகப்பெரிய நினைவின் கடைசி முத்தம்
இந்த வானத்தில்தான் கரைந்தது
ஒரு மிகப்பெரிய அழிவின் கடைசி கேவல்
இந்த வானத்தில்தான் எதிரொலித்தது
இன்னும் எத்தனையோ மிகப்பெரியவைகளுக்கு
இந்த வானம் சாட்சியாக இருந்திருக்கிறது
இருந்தும் எதற்கும் இந்த வானம் அசைந்ததில்லை
இன்று நீ சொன்னது ஒரு மிகச்சிறிய சொல்
அதற்குள் இருப்பது ஒரு மிகச்சிறிய அர்த்தம்
அது எதிர்பார்ப்பது ஒரு மிகச்சிறிய நியாயம்
ஆனால் அதுதான் இன்று இந்த வானத்திற்கு
சிறகுகளை கொடுத்திருக்கிறது அன்பே