வேலையிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட
மாலை வேளை
தண்ணீர் குடித்துவிட்டு படுக்கைக்குச் செல்கிறேன்
கண்களை மூடியபோது
இமைகளின் மீது படர்ந்திருந்த வண்ணக்குமிழ்கள்
எண்ணங்களின் நகல்களை
மூளையின் உள்ளே பயணிக்கச் செய்கின்றன
முகங்கள் மாற காலங்கள் சுழல என
தேடியதையெல்லாம்
தொலைத்துவிட்டதன் வெறுமை
கருப்பு நதியாக
என் மதுக் கோப்பையில் தளும்புகிறது
வன்மமும் குரூரமும்
விகார வனவிலங்குகளென
உருப்பெற்று விழி நரம்புகளில்
ஊடுருவி இதயக்குழாய்களை
அறுத்தெறிகின்றன
கேலி பேசிய குரல்களின் அபசுவரத்தில் இருந்தும்
கிழித்தகற்றப்பட்ட உறவுகளின் எச்சத்தில் இருந்தும் விடுபட
நினைவுகளின் பாதையோடு வெகுநேரம் போராடவேண்டியிருக்கிறது
கருணை அன்பு நட்பு நேசம் என
வேடம் தரித்த முகங்கள்
ரட்சகன் தோட்டத்து சாத்தானென
என் நிர்வாணத்தை ஆபாசமாக்குகின்றன
மரணத்திற்கும் அதன் முந்தைய நொடிக்குமிடையேயான
பயமும் பரிதவிப்பும் பார்வையை மெல்ல மழுங்க செய்ய
இரையை தேடி என் செவிகளில் நுழைந்த சர்ப்பம்
வேட்டைக்கான வேகத்தில் தனது நீளத்தினை
சரசரவென அதிகரித்து என் நாசியின் வழியே
தனது இரு தலைகளையும் வெளிக்கொணர்கிறது
கண்கள் படபடவென அடித்துக்கொள்கின்றன
உடல் முழுவதுமாக வியர்வையில் நனைந்திருந்தது
மின்விசிறியின் வேகத்தினை கூட்டுகிறேன்
மின் காம்புகள் சுழல மறுக்கின்றன.
கண்ணாடிச் சுவர்களின்
அத்தனை பிம்பங்களிலும் "நான்"
நான் தற்கொலையில் தோற்று கொலைகள் செய்பவனாக
நான் இரக்கமுள்ளவனாக
நான் எழுத்தாளனாக
நான் வேசியின் மடியில் நாயகனாக
நான் மதுபான விடுதியில் பைத்தியக்காரனாக
நான் பிணங்களை தேடும் காட்டு கழுகாக
நான் சுடுகாட்டினில் சில்லறை பொறுக்குபவனாக
ஒவ்வொரு பிம்பங்களும்
ஒன்று
மற்றொன்று
இன்னொன்று என
அம்பாரங்களை உண்டுப் பண்ண
பிரதியானவை யாவும்
கதறலாய் அழுகின்றன
சிந்தனை செயலிழக்க துவங்குகிறது
மீண்டும் தண்ணீர் குடிக்கச் செல்கிறேன்
நீரினில் உதிரத்தின் சுவடுகள்
உறியப்பட்டவை
உறியப்பட இருப்பவை
தொண்டை குழியினை பிளந்துக்கொண்டு
குருதி வெள்ளம் தரையை நனைக்கிறது
அறையெங்கும் பொசுங்கிய சாம்பலின் வாசம்
நாறும் ஞாபகங்களிலிருந்து விடுவித்து
சுயநினைவுக்கு மீட்டுவந்த அலைபேசியில்
இனியக்குரல் யுவதியொருத்தி
கொஞ்சலாய் பேசுகிறாள்
"உங்களுடைய இரண்டு நிமிடங்களை
கடனாக அளித்தால்
நீங்கள் வீடுகட்ட
நாங்கள் கடன் தருகிறோம்"
இப்பொழுதிற்கு
ஒரு கருநீல புடவையும்
இரண்டடி ஸ்டூலும்கூட போதும் சகோதரியே
நரகத்தின் வாசல் திறந்தே இருக்கிறது....
துரோணா.
மாலை வேளை
தண்ணீர் குடித்துவிட்டு படுக்கைக்குச் செல்கிறேன்
கண்களை மூடியபோது
இமைகளின் மீது படர்ந்திருந்த வண்ணக்குமிழ்கள்
எண்ணங்களின் நகல்களை
மூளையின் உள்ளே பயணிக்கச் செய்கின்றன
முகங்கள் மாற காலங்கள் சுழல என
தேடியதையெல்லாம்
தொலைத்துவிட்டதன் வெறுமை
கருப்பு நதியாக
என் மதுக் கோப்பையில் தளும்புகிறது
வன்மமும் குரூரமும்
விகார வனவிலங்குகளென
உருப்பெற்று விழி நரம்புகளில்
ஊடுருவி இதயக்குழாய்களை
அறுத்தெறிகின்றன
கேலி பேசிய குரல்களின் அபசுவரத்தில் இருந்தும்
கிழித்தகற்றப்பட்ட உறவுகளின் எச்சத்தில் இருந்தும் விடுபட
நினைவுகளின் பாதையோடு வெகுநேரம் போராடவேண்டியிருக்கிறது
கருணை அன்பு நட்பு நேசம் என
வேடம் தரித்த முகங்கள்
ரட்சகன் தோட்டத்து சாத்தானென
என் நிர்வாணத்தை ஆபாசமாக்குகின்றன
மரணத்திற்கும் அதன் முந்தைய நொடிக்குமிடையேயான
பயமும் பரிதவிப்பும் பார்வையை மெல்ல மழுங்க செய்ய
இரையை தேடி என் செவிகளில் நுழைந்த சர்ப்பம்
வேட்டைக்கான வேகத்தில் தனது நீளத்தினை
சரசரவென அதிகரித்து என் நாசியின் வழியே
தனது இரு தலைகளையும் வெளிக்கொணர்கிறது
கண்கள் படபடவென அடித்துக்கொள்கின்றன
உடல் முழுவதுமாக வியர்வையில் நனைந்திருந்தது
மின்விசிறியின் வேகத்தினை கூட்டுகிறேன்
மின் காம்புகள் சுழல மறுக்கின்றன.
கண்ணாடிச் சுவர்களின்
அத்தனை பிம்பங்களிலும் "நான்"
நான் தற்கொலையில் தோற்று கொலைகள் செய்பவனாக
நான் இரக்கமுள்ளவனாக
நான் எழுத்தாளனாக
நான் வேசியின் மடியில் நாயகனாக
நான் மதுபான விடுதியில் பைத்தியக்காரனாக
நான் பிணங்களை தேடும் காட்டு கழுகாக
நான் சுடுகாட்டினில் சில்லறை பொறுக்குபவனாக
ஒவ்வொரு பிம்பங்களும்
ஒன்று
மற்றொன்று
இன்னொன்று என
அம்பாரங்களை உண்டுப் பண்ண
பிரதியானவை யாவும்
கதறலாய் அழுகின்றன
சிந்தனை செயலிழக்க துவங்குகிறது
மீண்டும் தண்ணீர் குடிக்கச் செல்கிறேன்
நீரினில் உதிரத்தின் சுவடுகள்
உறியப்பட்டவை
உறியப்பட இருப்பவை
தொண்டை குழியினை பிளந்துக்கொண்டு
குருதி வெள்ளம் தரையை நனைக்கிறது
அறையெங்கும் பொசுங்கிய சாம்பலின் வாசம்
நாறும் ஞாபகங்களிலிருந்து விடுவித்து
சுயநினைவுக்கு மீட்டுவந்த அலைபேசியில்
இனியக்குரல் யுவதியொருத்தி
கொஞ்சலாய் பேசுகிறாள்
"உங்களுடைய இரண்டு நிமிடங்களை
கடனாக அளித்தால்
நீங்கள் வீடுகட்ட
நாங்கள் கடன் தருகிறோம்"
இப்பொழுதிற்கு
ஒரு கருநீல புடவையும்
இரண்டடி ஸ்டூலும்கூட போதும் சகோதரியே
நரகத்தின் வாசல் திறந்தே இருக்கிறது....
துரோணா.