பாறைகளெங்கும் படர்ந்திருந்த
செடிகளின் வழியே பரவுகிறது
ஒரு பச்சை வாசம்
சின்னஞ்சிறு கற்களுக்கடியே
பதிந்திருந்த மணல் துகள்கள்
யாவற்றிலும் படிந்திருக்கிறது
ஒரு ஈர சாயம்
குகை வாயிலில்
மானின் கூரிய கொம்புகள்
மாட்டின் விலா எலும்பொன்றை
நீ குகையினுள்ளே கண்டெடுத்தாய்
மற்றொரு இடத்தில்
நரியின் அறுபட்ட வாலும்
காக்கையின் அலகும் ஒட்டிக்கிடந்தன
தரையினில் சிதறியிருக்கும்
புலியின் நகங்கள் வேறு
அவ்வப்போது நமது கால்களை கிழிக்கின்றன
இத்தனை உயிரினங்களும்
சேர்ந்து வாழந்த அல்லது
நாம் பாதையெங்கும்
நமது கண்களில் சிக்காது
அந்த குகையின் சுவர்களில்
ஒளிந்துக்கொண்டிருக்கிறது
ஒரு இறந்த மனிதனின் கைரேகை
-துரோணா
3 comments:
//நமது கண்களில் சிக்காது,
அந்த குகையின் சுவர்களில்
ஒளிந்துக்கொண்டிருக்கிறது
ஒரு இறந்த மனிதனின் கைரேகை.....//
சூப்பர் ... திரிலிங்க்காக ஆரம்பித்து நச் டச் .. கவிதை அருமை. வாழ்த்துக்கள்.
நன்றி சரவணன்.....(நிச்சயம் மதுரையை சேர்க்க வேண்டுமா?)
நல்ல அடித்தளத்தில் அருமையாக முடிவு பெற்ற கவிதை
Post a Comment