Saturday, December 11, 2010

கானல் திரை



அந்த நிலவின்
அதே படிமம்
நான் பார்த்த
அதே மலைதான்
இன்னுமொரு முறை
உயிர்த்தெழுகிறது,
முந்தைய இரவின்
சத்தியத்தை காப்பாற்ற.
 தன் சாம்பல் கரையில்
புரளும் குருதியை
கழுவிக்கொண்டிருக்கின்றன
நுரை அலைகள்.
வார்த்தைகளின் ஞாபகங்களை,
கையிலேந்தியபடியே திரிகின்றான்
ஒரு அம்மண துறவி.
அவனை தொடர்ந்து
அவ்வழிகளில் படர்கின்றன,
வெறுப்பின் எச்சங்கள்,
அன்பை நோக்கிய கனவுகளை தாங்கி.
வானாக
பூமியாக
சூரியனாக
நதி ஓடைகளாக
எங்கும் மீதமிருக்கிறது ஒரு குரல்.
மிகவும் எளிதாக
ஒரு காதலை
ஏற்கவும் மறுக்கவும்
நாம் பழகிக்கொண்டோம்.
அந்த நிலவின் அதே படிமம்
நான் பார்த்த அதே மலைதான்
இன்னுமொருமுறை மடிந்து விழுகிறது.
                 
                                                                                                                                         -துரோணா

2 comments:

Raja said...

நண்பரே...எல்லா கவிதைகளையும் வாசித்துவிட்டேன்...மிக அருமையாக உள்ளன...தொடர்ந்து வாசிக்கிறேன்...வாழ்த்துக்கள்...

Saran ajith said...

the below lines inspired much........மிகவும் எளிதாக ஒரு காதலை
ஏற்கவும் மறுக்கவும் நாம் பழகிக்கொண்டோம்

Post a Comment