ஒரு
இலையுதிர்வை போல்தான்,
இருந்தது அக்கணம்.
மிகவும் இலகுவாக
அதே சமயம் மிகவும் கனமாக.
நீர்த்துப் போன மௌனங்களுடன்
கடந்துக் கொண்டிருந்தன
தொடர்ந்து வெளிப்பட்ட
ஒவ்வொரு கணங்களும்.
O
முன்தீர்மாணங்கள் இல்லாத
எந்த நிகழ்விற்குமே
நான் இதுவரை பழகியதில்லை.
நேரங்காட்டியை மீண்டுமொருமுறை
சரி பார்த்துக் கொள்கிறேன்.
சொற்களை கையாள்வதுப் போல்
காலத்தினையும்,மிகுந்த நேர்த்தியுடனே
நீ கையாள்கிறாய்.
O
இருந்தது அக்கணம்.
மிகவும் இலகுவாக
அதே சமயம் மிகவும் கனமாக.
நீர்த்துப் போன மௌனங்களுடன்
கடந்துக் கொண்டிருந்தன
தொடர்ந்து வெளிப்பட்ட
ஒவ்வொரு கணங்களும்.
O
முன்தீர்மாணங்கள் இல்லாத
எந்த நிகழ்விற்குமே
நான் இதுவரை பழகியதில்லை.
நேரங்காட்டியை மீண்டுமொருமுறை
சரி பார்த்துக் கொள்கிறேன்.
சொற்களை கையாள்வதுப் போல்
காலத்தினையும்,மிகுந்த நேர்த்தியுடனே
நீ கையாள்கிறாய்.
O
உன்னுடைய
கேள்விகள் அனைத்திற்குமே
என்னிடம் பதில்கள் உள்ளன,
பொருத்தமான வார்த்தைகள்தான் இல்லை.
நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
ஒரு சிகரெட் இருந்தால் தேவலாம்.
O
கூண்டு புலியின் கண்கள்
இரும்புக் கதவின் கம்பிகளை
எதிர்கொள்ளும்
அதே வேட்கையுடன்
அதே கோபத்துடன்
அதே ஏமாற்றத்துடன்
அதே வேதனையுடன்
நான் அந்த கணங்களை
எதிர்கொள்ள துணிகிறேன்
எந்த நியாயங்களுக்கும் தகுதியற்ற ஒரு குடிகார சூதாடி மீண்டுமொருமுறை சீட்டுக்கட்டை கலைத்தடுக்குகிறான்
o
என்னிடம் பதில்கள் உள்ளன,
பொருத்தமான வார்த்தைகள்தான் இல்லை.
நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
ஒரு சிகரெட் இருந்தால் தேவலாம்.
O
கூண்டு புலியின் கண்கள்
இரும்புக் கதவின் கம்பிகளை
எதிர்கொள்ளும்
அதே வேட்கையுடன்
அதே கோபத்துடன்
அதே ஏமாற்றத்துடன்
அதே வேதனையுடன்
நான் அந்த கணங்களை
எதிர்கொள்ள துணிகிறேன்
எந்த நியாயங்களுக்கும் தகுதியற்ற ஒரு குடிகார சூதாடி மீண்டுமொருமுறை சீட்டுக்கட்டை கலைத்தடுக்குகிறான்
o
உன்னிடம்
இருக்குமளவிற்கு
என்னிடம் சாட்சியங்கள் இல்லை.
நீ எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்.
நானும் எதையும் நிரூபிப்பதற்கில்லை.
நாளையும் மழை பெய்யும் என்ற
எளிய நம்பிக்கை மட்டுமே
என்னிடம் மீதமிருக்கின்றது.
O
இறுதியில்,
நீயும் சென்று விட்டாய்.
நானும் சென்றுவிட்டேன்.
சொல்லிக் கொள்ளாமல்
செல்வதில் தான்
எவ்வளவு சௌகரியங்கள்.
யாரும் பார்க்கும் முன்னே
கண்களை துடைத்துக் கொள்ளலாம்.
O
நாம் சென்ற பிறகும்,
அந்த கணங்களுக்குள்ளாக,
சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன
நம் நினைவுகளின் வார்த்தைகள்.
வார்த்தைகள்
என்னிடம் சாட்சியங்கள் இல்லை.
நீ எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்.
நானும் எதையும் நிரூபிப்பதற்கில்லை.
நாளையும் மழை பெய்யும் என்ற
எளிய நம்பிக்கை மட்டுமே
என்னிடம் மீதமிருக்கின்றது.
O
இறுதியில்,
நீயும் சென்று விட்டாய்.
நானும் சென்றுவிட்டேன்.
சொல்லிக் கொள்ளாமல்
செல்வதில் தான்
எவ்வளவு சௌகரியங்கள்.
யாரும் பார்க்கும் முன்னே
கண்களை துடைத்துக் கொள்ளலாம்.
O
நாம் சென்ற பிறகும்,
அந்த கணங்களுக்குள்ளாக,
சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன
நம் நினைவுகளின் வார்த்தைகள்.
வார்த்தைகள்
வெறும்
வார்த்தைகளாக
மட்டும் இருப்பதில்லையே
மட்டும் இருப்பதில்லையே
4 comments:
மிக அருமையாக இருக்கிறது...சற்று நீளமோ? எல்லா வார்த்தைகளும் அட்டகாசமாக வந்து விழுந்துவிட்டால், எதை எடுத்து, எதை விடுப்பார் கவிஞர்? வாழ்த்துக்கள் விஷால்...
மிகுந்த நன்றிகள் ராஜா :)
காட்சியைக் கவித்துவமாக வெளிப்படுத்தும் கவிதை .. ஒரு சிறு ஊடலில் காதலியைச் சமாளிக்கும் நினைவோடு சேர்த்து ஒரு கவிதையையும் கண்டெடுத்த விழிப்புணர்வுக்குப் பாராட்டுக்கள் .. பிடித்த வரிகள்
//நீ எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்.
நானும் எதையும் நிரூபிப்பதற்கில்லை.
நாளையும் மழை பெய்யும் என்ற
எளிய நம்பிக்கை மட்டுமே
என்னிடம் மீதமிருக்கின்றது.//
மிகுந்த நன்றிகள் மதி.....
Post a Comment